கோலியா? ரோகித்தா? “ரெண்டு பேரும் ‘இந்த’ விஷயத்துல சூப்பர்..!”- இந்திய பவுலரின் ‘நெகிழ்ச்சி’ பேட்டி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாளை நவம்பர் 17-ம் தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. விராட் கோலி விலகி ரோகித் சர்மா கேப்டன் ஆக பொறுப்பு ஏற்ற பின்னர் முதல் போட்டியாக நாளைய போட்டி அமைய உள்ளது. இந்த சூழலில் கோலி-க்கும் ரோகித்-க்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் அணியில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பகிர்ந்துள்ளார் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்.
இந்தியா சமீபத்தில் பங்கேற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் அணியில் இடம் பெறாமல் போன யுவேந்திர சாஹல் தற்போது மீண்டும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான அணியின் இடம் பெற்றுள்ளார். இந்திய அணி புது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் முதல் போட்டியை சந்திக்க உள்ளது. இந்த போட்டியில் கேப்டன் மாறுதல்களால் அணியில் எந்த அளவு மாற்றங்கள் இருக்கிறது என்பது குறித்து பகிர்ந்துள்ளார் சாஹல்.
சாஹல் கூறுகையில், “விராட் பய்யாவுக்கும் ரோகித் பய்யாவுக்கும் கேப்டன் பொறுப்பைப் பொறுத்தவரையில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. இரண்டும் பேரும் சிறந்த கேப்டன்கள். கேப்டன்களாக இருவருக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லாததால் அணியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் தெரியாது. எனக்கு ரோகித் பய்யாவை நீண்ட நாட்களாகத் தெரியும். அவருடன் பல சீரிஸ்களில் விளையாடி இருக்கிறேன். என்னுடைய ஐபிஎல் பயணத்தை நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து தான் தொடங்கினேன்.
அப்போது இருந்தே ரோகித் பய்யாவை ஒரு கேப்டன் ஆக பார்த்துவிட்டேன். இதனால், எனக்கு அவர் தலைமையின் கீழ் விளையாடுவதில் பெரிதாக மாற்றம் தெரியாது. கோலி உடன் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கிறோனோ அதே அளவு ரோகித் உடனும் நெருக்கமாகவே இருந்திருக்கிறேன். இவருக்கும் உள்ளேயும் இருக்கும் சிறப்பான, ஒரே மாதிரியான குணம் என்னவென்றால் இருவருமே இளைஞர்களை அதிகப்படியாக ஊக்குவிப்பார்கள். இருவருமே அதிக சுதந்திரம் தருவார்கள். இதுதான் இவர்கள் இருவரிடமும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
இருவரும் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றபடி பந்துவீச அறிவுறுத்துவார்கள். ரவி சாரும் விராட் பய்யாவும் இந்திய கிரிக்கெட் வரலாறை பெரிய உச்சத்துக்கு தூக்கிச் சென்றுள்ளார்கள். என்ன கோலி பய்யாவை மிஸ் பண்ணுவேன். ரவி சாஸ்திரி சார் எனக்கு மிகப்பெரிய பலம் ஆக இருந்தவர். எனது பந்துவீச்சின் நுணுக்கங்களை மெருகேற்றியதே ரவி சார் தான். நான் அணியில் சேர்ந்ததில் இருந்தே ரவி சாரின் பயிற்சியின் கீழ்தான் இருந்திருக்கிறேன். அவருடனான அனுபவம் எனக்குப் பெரிய பாடம்” என நெகிழ்ச்சி உடன் பேசியுள்ளார்.