VIDEO: ப்பா, 'வேற லெவல்'ல பொளந்து கட்டிட்டாரு...! 'சல்யூட் அடித்து கொண்டாடிய ரோஹித் ஷர்மா...' - வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான மார்டின் கப்தில் 51 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார். ஆனால், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் டிம் செய்பர்ட் (17) மற்றும் லோகி பெர்குசன் (14) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இறுதியாக 17.2 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் கடைசி ஓவரில் தீபக் சாஹர் 93 மீட்டர் பிரம்மாண்ட சிக்ஸர் அடித்தார். அதனை டக் அவுட்டில் இருந்து கண்ட கேப்டன் ரோகித் சர்மா சல்யூட் அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
— Simran (@CowCorner9) November 21, 2021

மற்ற செய்திகள்
