தமிழக முதல்வர் சொன்ன 'அந்த' விஷயம்...! 'குலுங்கி சிரித்த பொதுமக்கள்...' 'அதைக்கண்டு முதல்வரும் சிரிப்பு...' - பரப்புரையில் சரவெடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்டம், மதுரை மத்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசினார்.
அப்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின், எங்கு சென்றாலும் என்னைப் பற்றியும், அமைச்சர்களைப் பற்றியும் தான் பேசி வருகிறார். நான்கு வருடத்திற்கு முன்பு இந்த எடப்பாடி பழனிச்சாமியை யார் என்றே அவருக்கு தெரியாது என்று கூறினார்.
ஆனால் தற்போது என்னைப் பற்றி பேசவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வருவது கிடையாது. யார் என்றே தெரியாத ஒருவரை ஏன் தொடர்ந்து பேசி வருகிறார் என்று தெரியவில்லை. இந்த எடப்பாடி பழனிசாமி கிராமத்தில் இருந்து வந்தவன்.
எளிதாக ஆட்சியை கவிழ்த்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என்று நினைத்தார் அவர் கனவு ஒன்று கூட பலிக்கவில்லை. உங்களுடைய ஆதரவுடன் அனைத்தையும் தவிடுபொடியாக்கினேன். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சரானால் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தேன். மக்களாகிய உங்களுடைய ஆதரவினால் அனைத்திலும் வெற்றி பெற்றேன்.
நான் கிளைச் செயலாளர், ஒன்றியம், மாவட்டம், தலைமைப் பொறுப்புகளுக்கு வந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து, உங்கள் ஆதரவோடு முதலமைச்சர் என்ற பணி செய்து வருகிறேன்.
பொதுமக்கள் என்னை ஆதரித்தார்கள், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை ஆதரித்தார்கள். அதன் காரணமாக முதல்வர் ஆனேன். ஸ்டாலினா என்னை முதலமைச்சர் ஆக்கினார். அவர் எதிர்கட்சி தலைவர் பணியையாவது ஒழுங்காக செய்தாரா என்றால் அதுவும் இல்லை அவர் சட்டமன்றத்திற்கும் வர மாட்டார், என்ன நடக்கிறது என்றும் தெரிந்துக்கொள்வதும் கிடையாது.
நான் முதலமைச்சர் ஆனதிலிருந்து சட்டமன்றத்திற்கு செல்லாமல் ஒருநாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. நூற்றுக்கு நூறு சதவிகிதம் நான் பணியாற்றி உள்ளேன். இதுவரை தமிழக வரலாற்றில் சட்டமன்ற கூட்டத்தில் அனைத்து நாட்களும் பங்கேற்ற முதல்வர் நான் மட்டும் தான்.
நான் கிராமத்திலிருந்து வந்தேன். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக மக்களுக்காக செயலாற்றினேன். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளாத ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். அண்ணா திமுக அரசு என்ன நன்மை செய்தீர்கள் என்று கேட்கிறார். மதுரை மாவட்டத்தில் அண்ணா திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நிறைய பாலங்களை கட்டி கொடுத்திருக்கிறோம், என்று பேசினார்.
மேலும், நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டமன்றத்திலே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு போட்டார். அப்படி பெரும்பான்மையை நிரூபித்தபோது, எத்தனை அட்டகாசம் செய்தார்கள். எழுந்து மேசையின் மீது நடனமாடுகிறார்கள். புத்தகத்தை தூக்கி வீசுகிறார்கள். என்று கூறினார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களிடையே சிரிப்பலை எழுந்தது. அதைக்கவனித்த முதல்வரும் சிரித்தார்.
மேலும் இதுகுறித்து பேசும்போது, நீதிபதி இருக்கைக்கு சமமான சபாநாயகர் இருக்கைக்கு சென்று சபாநாயகரை கீழே தள்ளிவிட்டு அவர்கள் அமர்ந்த கொடுமையான காரியத்தை நானே என் கண்கொண்டு பார்த்தேன். சட்டமன்றத்திலே தி.மு.கவினர் ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்தபோது சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியிலே சென்றார் ஸ்டாலின். இப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், இவ்வாறு தமிழக முதல்வர் பரப்புரையின் போது பேசினார்.