வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் ஹாயாக படுத்திருந்த ரிஷப் பந்தின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று (09.02.2022) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும், கே.எல்.ராகுல் 49 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை ஒடியான் ஸ்மித் மற்றும் அன்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரோச், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ஃபேபியன் ஆலன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே ஹாயாக படுத்து கிடந்த போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதை மீம்ஸ் செய்து பகிர்ந்து வருகின்றனர் இப்போட்டியில் ரிஷப் பந்த் (18 ரன்கள்) முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Just Rishabh Pant thinks 😂😭#INDvWI #INDvsWI pic.twitter.com/6zBzwqbChL
— Cricket Page (@CricketPage3) February 9, 2022

மற்ற செய்திகள்
