"ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கணும்".. ஏபி டிவில்லியர்ஸ் உருக்கம்.. கலங்கிப்போன ரசிகர்கள்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களை கலங்க செய்திருக்கிறது.

ஏபி டி வில்லியர்ஸ் 2011 முதல் 2021 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. AB டி வில்லியர்ஸ் RCB க்காக 157 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவருடைய ஆவரேஜ் 41.10 ஆகும். 158.33 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ஏபிடி இதுவரையில் 2 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 4522 ரன்கள் எடுத்திருக்கிறார். முன்னதாக, இந்த ஆண்டு ஏபிடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ஹால் ஆஃப் ஃபேமில் மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற பேட்டர் கிறிஸ் கெய்லுடன் இணைந்து சேர்க்கப்பட்டார்.
மன்னிப்பு
இந்நிலையில், அவருக்கு சமீபத்தில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து இனிமேல் தன்னால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவித்திருக்கிறார் டிவில்லியர்ஸ். சில தினங்களுக்கு முன்னர் சமூக வலை தளங்களில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய போது, ஏபிடி இதனை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"அடுத்த வருடம் சின்னசாமி ஸ்டேடியம் போவேன். ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்காக அல்ல. இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாததற்காக ஆர்சிபி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க இருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக அவர்கள் அளித்த ஆதரவிற்காகவும் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. என்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியாது" என்றார்.
வயதாகிவிட்டது
தற்போது 38 வயதான ஏபி டிவில்லியர்ஸ், Legends League -ல் விளையாட தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அறுவை சிகிச்சை காரணமாக தான் அதில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி பேசிய அவர்,"எனக்கு இப்போது வயதாகிவிட்டது. லெஜண்ட்ஸ் லீக் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அப்போட்டியில் விளையாட எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நான் கண் அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது.அதனால் அப்போட்டியில் பங்கேற்கவில்லை" என்றார்.
மேலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் தான் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விருப்பம் இருந்தாலும் ஒரு அணிக்கு பயிற்சியாளராக செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் கூறியிருக்கிறார். விரைவில் யூடியூப் சேனல் ஒன்றை துவங்க இருப்பதாகவும் அதில் விராட் கோலியை முதல் விருந்தினராக அழைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
