ஹேக் செய்யப்பட்ட RCB அணியின் ட்விட்டர் பக்கம்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்.. அணி நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட்டிருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அணி நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
images are subject to © copyright to their respective owners
ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் அணிகளுள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு என தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் அந்த அணி இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ்-ஐ 3.2 கோடி ரூபாய்க்கும் ரீஸ் டாப்லியை 1.9 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்திருந்தது. ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்புகள் வெளிவர துவங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிரது.
இது குறித்து அந்த அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்," ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கம் ஜனவரி 21 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பக்கத்தை எங்களால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த துரதிருஷ்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆகவே, அந்த பக்கத்தில் பதிவிடப்படும் எந்த கருத்துகளுக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தடங்கலுக்கு வருந்துகிறோம். இதனை சரிசெய்ய ட்விட்டர் குழுமத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். விரைவில் இந்த சிக்கல் தீர்க்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ராய்பூரில் ஜனவரி 21 அன்று நடைபெறவிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர்பான வீடியோ ஆர்சிபி பக்கத்தில் கடைசியாக பதிவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் தொழில்நுட்ப குழு இறங்கியுள்ளது. இதுபற்றி அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.