'2021 ஐபிஎல் வின்னர் 'இவங்க' தான்'!.. திடீரென வெளியான தகவலால்.. அரண்டு போன அணிகள்!.. பிசிசிஐ-க்கே ஷாக் கொடுத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021 ஐபிஎல் தொடரின் வின்னர் யார் என்பது பற்றிய ஒரு ஆய்வுப் பூர்வமான தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரின் பயோ - பபுளை மீறி, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட, பின் அடுத்தடுத்து பல்வேறு அணிகளின் வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்று பரவ, மறு தேதி குறிப்பிடாமல் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் எப்போதும் தொடர் துவங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, தொடங்க வாய்ப்பிருக்கா? அல்லது 3000 கோடி வருமானம் போனாலும், உயிர் முக்கியம் என்று எண்ணி பிசிசிஐ முடிவெடுக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால், இந்த நிமிடம் வரை ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள 31 போட்டிகள் எப்போது துவங்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இந்நிலையில், ஐபிஎல் 2021 தொடர் முழுமையாக நடைபெற்றால், ஆர்சிபி அணி தான் சாம்பியன் என்று கையில் ஃபார்முலாவோடு கிளம்பியிருக்கிறார் ஒருவர். ஆதிஷ் ஜெயின் என்ற ஆர்சிபி ரசிகர் ஒருவர், Reddit தளத்தில், சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், Python program படி, பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று கூறுகிறார்.
இதுகுறித்து பேசிய அவர், கடந்த கால டேட்டாக்களை, predictive analysis மற்றும் randomization நுட்பங்களைப் பயன்படுத்தி ஐபிஎல்லின் முழு சீஸனின் (பிளே ஆஃப்களைத் தவிர்த்து) வெற்றி தோல்விகளை கண்டறிய பைதான் திட்டத்தை உருவாக்கினேன்.
ஒவ்வொரு வீரரின் கடந்த ஐந்து ஆண்டுகளின் டேட்டாக்களை பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்காக நான் பிரித்தெடுத்தேன். ஒரு பேட்ஸ்மேன் எந்தெந்த வகையில் ரன்கள் எடுத்தார் என்று ஆராய்ந்தேன். சிங்கிள்ஸ், டபுள்ஸ், பவுண்டரிகள் அல்லது சிக்ஸர்கள் என ரன்கள் எடுக்கப்பட்ட விதத்தை தரம் பிரித்தேன். அதேபோல், பந்து வீச்சாளர்கள் எந்தெந்த வகையில் ரன்களை லீக் செய்தார்கள் என்பதை கணக்கிட்டேன்.
குறிப்பாக, பவர் பிளே, மிடில் ஓவர்கள் அல்லது டெத் ஓவர்ஸ் என்று அனைத்து வித ஓவர்களில் எவ்வளவு ரன்கள் போனது என்று ஆராய்ந்தேன். மேலும், என்னென்ன விதத்தில் அதிகமாக பேட்ஸ்மேன்களை பவுலர்கள் வெளியேற்றினர், அதற்கு நேர்மாறாக எந்தெந்த விதத்தில் பேட்ஸ்மேன்கள் அவர்களாகவே வெளியேறினார்கள் என்றும் ஆராய்ந்தேன். மேலும், மொத்தம் போடப்பட்ட வைடுகள், நோ-பால், ஆவரேஜ் கேட்சுகள் என்று சகல டேட்டாக்களை கொண்டு எனது ஃபார்முலாவை உருவாக்கினேன்.
இந்த கணக்கீட்டின் படி, ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெறும் என்று அவர் கணித்துள்ளார். இவரது கணிப்பு படி, ஆர்சிபி, டெல்லி, சென்னை, பஞ்சாப் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆஃப்க்குள் நுழைகிறது.
அதில், குவாலிஃபயர் 1 - DC v RCB (RCB வெற்றி) எலிமினேட்டர் - CSK v PBKS (PBKS வென்றது) குவாலிஃபயர் 2 - PBKS v DC (DC வெற்றி) இறுதிப் போட்டி RCB v DC-க்கு இடையே நடைபெறும் போட்டியில், பெங்களூரு வெற்றி பெறும் என்று தனது ஃபார்முலாவை முடிக்கிறார்.
இந்த தகவலானது ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவதோடு, இணையத்தில் வேகமாகவும் பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
