'இந்தா ஆரம்பிச்சிட்டாருல'... 'ஐபிஎல் வந்தா போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது'... 'யார எங்க இறக்கணும் தெரியுமா'?... கொளுத்திப்போட்ட மஞ்ச்ரேக்கர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமஞ்ச்ரேக்கருக்கும் சர்ச்சைகளுக்கும் வெகு தூரம் கிடையாது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று ஆரம்பித்த நிலையில், சென்னை மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸின் ரவீந்திர ஜடேஜா கடந்த 7 போட்டிகளில் 6-வது வீரராகக் களமிறங்கி வருகிறார். ஆனால் நேற்றைய போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறங்கி 3 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார். இது நெட்டிசன்களால் விவாதிக்கப்பட நிலையில், ரவீந்திர ஜடேஜா எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ''ரவீந்திர ஜடேஜா நிச்சயம் தோனிக்கு முன்னதாக களமிறங்க வேண்டும். அப்போது தான் சென்னை அணி சிறப்பாகச் செயல்படும். மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் இந்த ஐபியலில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
முன்னதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் வர்ணனைக் குழுவில் இருந்து வந்தார். அவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். சஞ்சய் மஞ்சுரேக்கர் உலகக் கோப்பை போட்டியின்போது ரவீந்திர ஜடேஜாவை துண்டு, துக்கடா வீரர் என்ற தொனியில் வர்ணித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு ஜடேஜா பதிலடி கொடுத்த நிலையில், மஞ்சுரேக்கர் மன்னிப்பு கேட்டார்.
அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினையும் ஒருமுறை மஞ்சுரேக்கர் சீண்டியது பெரும் சர்ச்சையானது. அஸ்வினை, ''எல்லா காலத்துக்கும் ஏற்ற சிறந்த வீரர் என மக்கள் கூறுவதை நிச்சயம் ஏற்று கொள்ள முடியாது'' எனக் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.