IPL 2021: ‘இது யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்’.. ரசிகர்களுக்கு ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு பிசிசிஐ ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஐபிஎல் (IPL 2021) தொடரின் 14-வது சீசன் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. ஆனால் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
அதன்படி வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதுகின்றன. துபாயில் நடைபெற உள்ள இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுளாக ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஆனாலும் குறைந்த அளவிலான ரசிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைதானத்துக்கு வரும் அனைத்து ரசிகர்களும் கொரோனா பாதிகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் போட்டியை நேரில் காண்பதற்காக டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ ஐபிஎல் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.