'இந்த வீரர்கள் விளையாடுவது கஷ்டம் தான் போல'?... 'என்ன சொல்றீங்க, இவங்க இல்லன்னா எப்படி'?... அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வாரம் 19-ஆம் தேதி முதல் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியிலே மும்பை மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரரான பாப் டூபிளிசிஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரீபியன் லீக் தொடரில் விளையாடியதன் காரணமாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதே போன்று பிளே ஆப் சுற்றில் சாம் கரண் மற்றும் மொயின் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இரு வீரர்களும் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணியுடன் இணைய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள சென்னை அணிக்கு இது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
