முதல் மேட்சலையே 2 ‘ஸ்டார்’ ப்ளேயர்ஸ் மிஸ்ஸிங்..? ஆரம்பமே சிஎஸ்கே அணிக்கு வந்த சோதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் (IPL 2021), ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதுகின்றன.
இதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டு பிளசிஸ் (Faf du Plessis) இப்போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் டி20 லீக் தொடரில் (CPL), செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் சார்பாக டு பிளசிஸ் விளையாடி வருகிறார். இந்த நிலையில் போட்டி ஒன்றின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அரையிறுதிப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
இந்த சூழலில் வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பை அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது. அதனால் இப்போட்டியில் டு பிளசிஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் சென்னை அணியின் மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரான சாம் கர்ரன் (Sam Curran) இன்று (15.09.2021) தான் துபாய்க்கு வந்துள்ளார். அவர் இன்னும் 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதால், சாம் கர்ரனும் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. சிஎஸ்கே அணியின் இரண்டு முக்கிய வீரர்கள் முதல் போட்டியில் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
