'யோவ், மனுஷன் செம கில்லாடி தான்'... 'ரோகித் சர்மா மீது போட்ட சபதம்'... 'சொன்னதை செய்த ரவி சாஸ்திரி'... வாயடைத்து போன ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Aug 23, 2021 10:58 AM

ரவிசாஸ்திரி தான் சொன்ன சபதத்தை நிறைவேற்றி ரசிகர்களை வாயடைத்துப் போக வைத்துள்ளார்.

Ravi Shastri Was Determined To See Rohit Become A best Test Batsman

கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதிலும் குறிப்பாக அந்நிய மண்ணில் தனது திறமையை நிரூபித்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

Ravi Shastri Was Determined To See Rohit Become A best Test Batsman

ஆனால் அதனைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்திய அணியின் செயல்பாடு என்பது டெஸ்ட் போட்டிகளில் அற்புதமாக உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா சமீப காலமாக டெஸ்ட் தொடர்களில் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பு அங்குச் சாரல் மழை பெய்திருந்தது.

இதனால், பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் என்றும் பேட்டிங்கிற்கு கடினமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தனை யூகங்களையும் பொய்யாகிய ரோஹித், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த நம்பிக்கையான துவக்கம், வேகப்பந்துவீச்சாளர்களைச் சமாளிக்கப் பதற்றமாக இருந்த வீரர்களுக்கு ஒரு வித மன உறுதியைக் கொடுத்தது.

Ravi Shastri Was Determined To See Rohit Become A best Test Batsman

அந்த வகையில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதன் மூலம், ரோகித்சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத வீரராக மாறியுள்ளார். இதற்குப் பின்னால் ரவிசாஸ்திரியின் சபதம் ஒன்று ஒளிந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது ரோகித் சர்மா குறித்து மிஷன் டாமினேஷன் புத்தகத்தில், கடந்த 2019ம் ஆண்டு ரோகித் சர்மா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதன் முதலில் ஓப்பனிங் களமிறங்கிய போது, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நான் ரோகித்தை தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாற்றிக் காட்டுகிறேன்.

Ravi Shastri Was Determined To See Rohit Become A best Test Batsman

இல்லையென்றால் எனது கிரிக்கெட் வாழ்வின் தோல்வி என ஒப்புக்கொள்கிறேன்'' எனக் கூறியிருந்தார். தற்போது தான் சொன்னதை நிறைவேற்றி ரோகித்சர்மாவை அற்புதமான வீரராக மாற்றியுள்ளார். அதோடு தனது சபதத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravi Shastri Was Determined To See Rohit Become A best Test Batsman | Sports News.