"அவரு அந்த அளவுக்கு நல்லா ஆடுற மாதிரி ஒண்ணும் தெரியல.. 'முதல்'ல அவர வெளிய வைங்க.. அப்புறமா டீம் செட் ஆயிடும்.." 'RCB' பற்றி முன்னாள் வீரர் சொன்ன 'விஷயம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதவுள்ளன.

டெல்லி அணி மற்றும் பெங்களூர் அணிகள், புள்ளிப் பட்டியலில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறலாம். இதில், கோலி தலைமையிலான பெங்களூர் அணி, முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருந்த நிலையில், கடைசியாக சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில், 69 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.
இதனால், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இன்றைய போட்டியில் முனைப்பு காட்டும். இந்நிலையில், பெங்களூர் அணியில் முக்கிய மாற்றம் ஒன்றை இன்று நிகழ்த்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra) தெரிவித்துள்ளார். 'பெங்களூர் அணியின் பேட்டிங் லைன் அப், வலிமையாக இருந்தாலும், அதில் சிறிய குறை உள்ளது. இதனால் தான், வாஷிங்டன் சுந்தரை மூன்றாம் இடத்தில் பெங்களூர் அணி ஆட வைக்கிறது.
தேவ்தத், கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என வலிமையான வீரர்கள் இருந்த போதும், அதற்கு அடுத்த படியாக, பேட்டிங் செய்ய சிறந்த வீரர்கள் இல்லை. சிறப்பான ஆல் ரவுண்டராக ஆஸ்திரேலிய வீரர் டேனியல் கிறிஸ்டியன் (Daniel Christian) வலம் வந்தாலும், ஐபிஎல் தொடரில் இதுவரை அப்படியான தாக்கத்தை அவர் ஏற்படுத்தவில்லை. இதனால், அவருக்கு பதிலாக, டேனியல் சாம்ஸை (Daniel Sams) இன்று ஆட வைப்பது பற்றி பெங்களூர் அணி சிந்திக்க வேண்டும்.
அதே போல, ரஜத் படிதாரை மூன்றாவது வீரராக பெங்களூர் அணி களமிறங்கச் செய்ய வேண்டும். இதன் மூலம், தேவ்தத், கோலி, ரஜத் படிதார், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், அதற்கு அடுத்த படியாக வாஷிங்டன் சுந்தர், கைலி ஜேமிசன், டேனியல் சாம்ஸ் என பேட்டிங்கில் களமிறங்கும் போது, பேட்டிங் லைன் அப் சிறப்பாக இருக்கும்' என ஆகாஷ் சோப்ரா பெங்களூர் அணிக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்
