VIDEO: ‘கொல்கத்தா வீரர் சொன்ன ஒரு வார்த்தை’!.. உணர்ச்சிவசப்பட்டு ‘கண்கலங்கிய’ ஸ்டெய்ன்.. LIVE-ல் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் இளம்வீரர் சிவம் மாவி கூறிய ஒரு வார்த்தையைக் கேட்டு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கண்கலங்கினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக, 22 வயது இளம்வீரர் சிவம் மாவி (hivam Mavi) விளையாடி வருகிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்களை வீசி, 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் இதற்கு முன்னதாக நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 4 ஓவர்களை 19 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் (Dale Steyn) மற்றும் சிவம் மாவி கலந்துகொண்டு பேசிய ‘T20 Timeout’ என்ற நிகழ்ச்சி ESPNCricinfo யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது பேசிய சிவம் மாவி, ‘நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து டேல் ஸ்டெய்னை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நான் பவுலிங் செய்ய முடிவெடுத்ததும், டேல் ஸ்டெயின் பந்துவீசுவதை பார்த்துதான் கற்றுக்கொண்டேன். பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோரைப் பார்த்து சில உத்திகளை பின்பற்றுகிறேன். ஆனாலும் என்னுடைய ரோல் மாடல் எப்போதும் டேல் ஸ்டெய்ன்தான்’ என அவர் கூறினார்.
இதை சிவம் மாவி ஹிந்தியில் பேச, கீழே ஓடிய சப்-டைட்டில்ஸை படித்து டேல் ஸ்டெய்ன் உணர்ச்சியில் கண்கலங்கினார். பின்னர் பேசிய அவர், ‘இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. உண்மையாகவே என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும்போது, உலகின் எந்த மூலையில் வாழும் மக்களுக்கும் என்னுடைய விளையாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. இதை நினைக்கும்போது இன்னும் அதிகமாக விளையாட நான் விரும்புகிறேன்’ என உருக்கமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘சிவம் மாவியின் திறமைக்கு கண்டிப்பாக இந்தியா அணியில் விளையாடுவார். அதேபோல் கொல்கத்தா அணிக்கும் பெரிய பலமாக அவர் இருப்பார். சீக்கிரம் அவரை சந்திக்க விரும்புகிறேன். அதுதான் எனது கனவு நனவான தருணமாக இருக்கும்’ என டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2008-2010; 2019-2020), டெக்கான் சார்ஜர்ஸ் (2011-2012), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013-2015) மற்றும் குஜராத் லயன்ஸ் (2016) அணிகளின் சார்பாக டேல் ஸ்டெய்ன் விளையாடியுள்ளார். இதில் பெங்களூரு அணியின் சார்பாகதான் அதிகமாக அவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
