VIDEO: இப்படி அவுட் ஆவோம்னு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாரு.. பாவங்க மனுசன்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று துபாய் மைதானத்தில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ராம் 40 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டி காக் அவுட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஜோஸ் ஹசில்வுட் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரின் கடைசி பந்தை டி காக் எதிர்கொண்டார். அப்போது பந்து அவரது காலில் பட்டு மேலே சென்றது. இதனால் பந்து வேறெங்கோ சென்றுவிட்டது என டி காக் ரன் ஓட முயன்றார்.
ஆனால் பந்து சரியாக ஸ்டம்புக்கு அருகிலேயே விழுந்து போல்டாகியது. இதனை டி காக் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி பரிதாப நிலையில் இருந்தது. அப்போது டி காக் மட்டுமே நிலைத்து விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரும் இப்படி அவுட்டானது தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
