யாருப்பா அந்த ப்ளேயர்..? பாகிஸ்தான் வீரரின் பேட்டிங்கை பார்க்க மொத்த டீமையும் கூட்டிட்டு வந்த ரவி சாஸ்திரி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் வீரரின் ஆட்டத்தைக் காண இந்திய வீரர்கள் மொத்தமாக திரண்டு வந்த போட்டோ இணையத்தில் பரவி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் 24-ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக இரு அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. இதில் நேற்று துபாய் மைதானத்தில் முதலாவதாக பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து அதே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தான் அணி விளையாடியதுபோது, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் (Babar Azam) பேட்டிங்கை காண இந்திய வீரர்களை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அழைத்து வந்தார். சர்வதேச அளவில் சிறந்த வீரராக திகழ்ந்து வரும் பாபர் அசாம், நிச்சயம் இந்திய அணிக்கு தலைவலியாக இருப்பார்.
FANS FROM INDIA COMES TO WATCH BABAR AZAM'S BATTING 😅😅#BabarAzam #T20WorldCup #Pakistan #PAKvIND pic.twitter.com/OsQZ9Zl0ER
— Aiman Fatima 🏏 (@Cric_crazy_girl) October 18, 2021
அதனால் அவரின் பலம், பலவீனங்களை அறிய இந்திய வீரர்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. உடன் இங்கிலாந்து வீரர்களும் இருந்தனர். அப்போட்டியில் பாபர் அசாம் அரைசதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் பாபர் அசாம் முதல் இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் இரண்டாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
