‘அட்டகாசமாக இருக்கும் புதிய ஜெர்சி’.. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் அணிய போகும் ஜெர்சியை ‘அதிகாரப்பூர்வமாக’ வெளியிட்ட பிசிசிஐ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அணிய உள்ள ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை (T20 World Cup 2021) தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியலை அனைத்து நாட்டு அணிகளும் அறிவித்துவிட்டன.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் (IPL) தொடரின் 14-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிவடைந்ததும், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அணிய உள்ள புதிய ஜெர்சியை பிசிசிஐ இன்று (13.10.2021) வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஜெர்சியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியில், சிஎஸ்கே லோகோவுக்கு மேலே மூன்று ஸ்டார் இடம்பெற்றுள்ளது போல, இந்திய அணியின் ஜெர்சியிலும் மூன்று ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
