நெருங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. இந்திய அணியின் ‘ப்ளேயிங் 11’ எப்படி இருக்கும்..? ரவி சாஸ்திரி ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் தேர்வு குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி துபாய் மைதானத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற உள்ள வீரர்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனாலும் புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார் ஆகியோரது ஓவரில் அதிகளவில் ரன்கள் சென்றன. அதனால் அவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் அணியில் இடம்பெற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ‘பனியின் தாக்கத்தைப் பொறுத்தே இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அமையும். இந்தியா விளையாடவுள்ள பெரும்பாலான போட்டிகள் இரவில்தான் நடைபெறுகின்றன. அதனால் அப்போது பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களை சேர்க்கலாமா? அல்லது வேகப்பந்து வீச்சாளர்களை சேர்க்கலாமா? என முடிவு செய்யப்படும்.
டி20 உலகக்கோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 2 மாதங்களாக இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். அதனால் அவர்கள் அதிகமாக தயாராக வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆனாலும் அவர்களது ஆட்டத்தை காண ஆவலுடன் இருக்கிறேன்’ என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
