நாம 'சூப்பர்-12'ல செலெக்ட் ஆகலையே...! 'தோற்று' போனதை 'அக்செப்ட்' பண்ண முடியாமல்... - நெதர்லாந்து வீரர் வருத்தத்துடன் எடுத்த 'அதிரடி' முடிவு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் (22-10-2021) முடிவடைந்தன. இதனையடுத்து, சூப்பர்-12 சுற்று போட்டிகள் இன்று (23-10-2021) தொடங்குகிறது.
இந்த நிலையில், உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டது. இதன் காரணமாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பரிதாபகமாக இழந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில், உலக கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறாத காரணத்தினால் வருத்தமடைந்த நெதர்லாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ரியான் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றைய தினம் (22-10-2021) அறிவித்தார்.
ரியான் 2006-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2011-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரியான் 119 ரன்கள் அடித்து குவித்தார். அதேப்போன்று, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார். ரியான் டென் டெஸ்ஜெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1,541 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.