என்னது, 'சிஎஸ்கே' ஜெயிச்சது 'மேட்ச் ஃபிக்ஸிங்'கா...? 'எங்களுக்கு சந்தேகமா இருக்கு...' 'பரபரப்பை கிளப்பிய ரசிகர்கள்...' - கருத்து தெரிவித்த முன்னாள் வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசனின் முதல் பிளே-ஆஃப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 9-வது முறையாக ஐபிஎல் பைனலில் விளையாட உள்ளது. சென்னை அணி வென்றதும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். சிலர் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த நிலையில் இந்த போட்டி மேட்ச் பிக்ஸிங் போட்டி என ரசிகர்கள் சிலர் சந்தேகம் எழுப்புவதாக கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.
மேலும், அப்படி சொல்பவர்களுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்த போதும் சிலர் மேட்ச் பிக்ஸிங்காக இருக்குமோ என கிளப்பி விட்டனர். இப்போது சென்னை, டெல்லியை வீழ்த்தியதற்கும் அதே போல கற்பனை கலந்த முட்டாள்தனமான கருத்துகளை சிலர் கூறுகின்றனர்.
பிற அணிகள் சிறப்பாக விளையாடி போட்டியில் வெற்றி பெறும் போது அதற்கு மதிப்பு தாருங்கள். அவர்கள் எப்படி விளையாடி உள்ளார்கள் என்பதை கவனியுங்கள். அதை செய்யாமல் இது மாதிரியான முட்டாள்தனமான கற்பனைகள் எதற்கு?” என இர்ஃபான் பதான் பதிவிட்டுள்ளார்.
When MI was batting crazily few fans had some imaginary ideas, yesterday when Chennai won some fans again thinking on the same line. Guys, it’s good to be supporting your team, but when the other team is winning respect it, Admire how they play and stop this imaginary nonsense!
— Irfan Pathan (@IrfanPathan) October 11, 2021