இவ்ளோ சம்பவத்துக்கும் ‘காரணம்’ அந்த மனுசன் தானா..! வெளியான ‘சூப்பர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதீபக் சஹார் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்த தோனி தான் காரணம் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul) 98 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில், இப்போட்டி முடிந்ததும் நேராக கேலரிக்கு சென்ற சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் (Deepak Chahar), அங்கிருந்த தனது தோழி ஜெயா பரத்வாஜிடம் (Jaya Bhardwaj) காதலை வெளிப்படுத்தினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் மோதிரம் மாற்றி அங்கேயே நிச்சயம் செய்து கொண்டனர். அப்போது அருகில் இருந்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், தோனியின் மனைவி சாக்ஷி ஆகியோர் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
She said yesssss.! 💍
Congratulations Cherry.! Stay Merry.! 😍🥳#WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/qVmvVSuI7A
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
இந்த சூழலில் தீபக் சஹார் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ப்ளே ஆஃப் சுற்று முடிந்த பின்னர் காதலை சொல்லலாம் என தீபக் சஹார் நினைத்துள்ளார்.
ஆனால் அவ்வளவு நாட்கள் தள்ளிப்போட வேண்டாம், உடனே தெரிவித்துவிடு என தோனி அறிவுரை கூறியுள்ளார். அதன்படி முன்னதாக நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது தெரிவிக்க கூறியுள்ளார். ஆனால் தீபக் சஹார் மறுக்கவே, மீண்டும் நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் காதலை வெளிப்படுத்த கூறியுள்ளார்.
Showering lots of 💛 & 🎂 for the Cherry couple! 😍#SuperFam #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/t3a3bDIyzD
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 7, 2021
அதன்படியே நேற்றைய போட்டி முடிந்ததும் ஜெயா பரதவாஜிடம் தீபக் சஹார் காதலை கூறியுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வீடு திரும்பியதும் இருவரது திருமணம் குறித்து முடிவு செய்யப்படும் என தீபக் சஹாரின் தந்தை கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
