அந்த ‘ஒத்த’ வார்த்தைக்காகவா டெலிட் பண்ணீங்க..! கோலி போட்ட ‘முதல்’ ட்வீட்டை நோட் பண்ணீங்களா.. இந்த மனுசன் உண்மையாவே ‘வேறலெவல்’ தாங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியை பாராட்டி பதிவிட்ட ட்வீட்டை ஒரு வார்த்தைக்காக டெலிட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட்ட விராட் கோலியின் முதல் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் (IPL) தொடரின் முதல் ப்ளே ஆஃப் (Playoffs) சுற்று நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ரிஷப் பந்த் ( Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களும், ரிஷப் பந்த் 51 ரன்களும், ஹெட்மயர் 37 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியைப் பொறுத்தவரை ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, பிராவோ மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டு எடுத்தனர்.
இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் அன்ரிச் நார்ட்ஜே வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே போல்டாகி டு பிளசிஸ் வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கூட்டணியை நீண்ட நேரமாக டெல்லி அணியால் பிரிக்க முடியவில்லை. இதில் ருதுராஜ் கெய்க்வாட் 70 ரன்களும், ராபின் உத்தப்பா 63 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர், அம்பட்டி ராயுடு ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.
இதனால் கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி வந்தது. அப்போது கேப்டன் தோனி மற்றும் ஆல்ரவுண்டர் மொயின் அலி களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன் வீசினார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து மொயின் அலி அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட தோனி, பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தும் இன்சைடு எட்ஜ் ஆகி பவுண்டரிக்கு சென்றது.
இதனை அடுத்த பந்து ஒய்டாக சென்றது. இதனால் 3 பந்துகளுக்கு 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு சிஎஸ்கே அணி வந்தது. அப்போது டாம் கர்ரன் வீசிய 4-வது பந்தையும் தோனி பவுண்டரிக்கு விளாசினார். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி நுழைந்துள்ளது.
இந்த நிலையில் கடைசி ஓவரில் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்த சிஎஸ்கே கேப்டன் தோனியை பலரும் பாரட்டி வருகின்றனர். இதில் சர்ப்ரைஸாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), தோனி பாராட்டி ட்வீட் செய்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Anddddd the king is back ❤️the greatest finisher ever in the game. Made me jump Outta my seat once again tonight.@msdhoni
— Virat Kohli (@imVkohli) October 10, 2021
ஆனால் கோலி முதலில் பதிவிட்ட ட்வீட்டை சில நொடிகளிலேயே நீக்கிவிட்டார். அதில், ‘கிங் மீண்டும் வந்துவிட்டார். இந்த விளையாட்டில் சிறந்த ஃபினிஷர் அவர்தான். என் இருக்கையை விட்டு மீண்டும் ஒருமுறை இன்று துள்ளிக் குதித்தேன்’ என பதிவிட்டிருந்தார்.
He deleted a 50k liked tweet to add EVER!!! Like, EVER!!!! That's how much he values MSD awww🥺♥️✨!!!#MahiRat ♥️ pic.twitter.com/CypGtVXKxi
— Venba (இவள் வெண்பா) (@paapabutterfly) October 10, 2021
Guy deleted his tweet to add "ever". The way a 40 year old Dhoni brings out the inner fanboy of many is just unreal. pic.twitter.com/YU9pIVXWCY
— Heisenberg ☢ (@internetumpire) October 10, 2021
Deleted earlier tweet just to add "ever" in it. This is Virat Kohli for you ❤️❤️ #CSKvDC #MSDhoni #ViratKohli #ThalaDhoni #Thala #DhoniFinishesOffInStyle #IPL2O21 pic.twitter.com/wzsEaWJL2a
— Vishal (@weshall249) October 11, 2021
இதனை உடனே டெலிட் செய்த கோலி, ‘Ever’ என்ற வார்த்தையை சேர்த்து மீண்டும் பதிவிட்டார். முதலில், இந்த விளையாட்டில் சிறந்த ஃபினிஷர் அவர்தான் என இருந்தது. இந்த வார்த்தை சேர்த்ததும், இந்த விளையாட்டில் ‘எப்போதும்’ சிறந்த ஃபினிஷர் அவர்தான் என பொருள் வருகிறது. அந்த அளவிற்கு தோனியின் மீது விராட் கோலி மரியாதை வைத்துள்ளார். அந்த முதல் ட்விட்டுக்கு 50 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்திருந்தனர். ஆனால் கோலி அதை டெலிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.