எப்படி 'மனசு' வந்துச்சு...? இப்படி ஒரு 'கொடூரத்தை' செய்ய...! கேரளாவை 'உலுக்கிய' சம்பவத்தில் 'குற்றவாளி' யார்...? - உறுதி செய்த போலீசார்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பாம்பை ஏவி மனைவியை கொலை செய்த சம்பவத்தில் கொலையாளியை உறுதி செய்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் 25 வயதான உத்ரா தன் மாமியார் வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உத்ராவின் கணவர் சூராஜே பாம்பை விட்டு கடிக்க வைத்த சம்பவம் கேரளா மட்டுமல்லாது இந்தியாவையே அதிர செய்துள்ளது.
இளம்பெண் உத்ரா இறந்த சம்பவத்தில் அவரின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரே தன் பெண்ணை இரு முறை பாம்பு கடிக்க முயற்சி செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இந்த தகவலின் பெயரில் தான் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உத்ராவின் பெற்றோர் தன் பெண் 2020 மார்ச் 2-ஆம் தேதி கட்டுவிரியன் பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சூரஜ் கைது செய்யப்பட்டார். விசாரணையில், சூரஜ் தன் மனைவியை இதற்கும் முன் 2 முறை பாம்பை ஏவி கடிக்க வைக்க முயன்றதாக கூறியுள்ளார்.
மேலும், வழக்கை விசாரித்த காவல்துறையினர் அறிவியல் பூர்வமாகவும், தொழில்முறையிலும் விசாரித்து சூரஜ் தான் குற்றவாளி என நிரூபித்துள்ளனர். அதோடு, துப்பு துலங்க, தடயவியல், விலங்கின் டிஎன்ஏ உள்ளிட்ட பல நுணுக்கமான விஷயங்களை தனிப்படையினர் விசாரணைக்கு உள்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.