"ஆனாலும் ரொம்ப குசும்பு புடிச்ச ஆளு தான்".. UMPIRE கிட்ட சாஹல் பாத்த வேலை.. ஒரே சிரிப்பு தான் போங்க!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதி இருந்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

Also Read | "தயவு செஞ்சு Privacyக்கு மதிப்பு குடுங்க".. வைரல் ஆன வீடியோ.. கொந்தளித்த கோலி!!
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது.
இதன் சூப்பர் 12 சுற்று போட்டிகள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த விறுவிறுப்பு தற்போதே அதிகரித்துள்ளது.
இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி குரூப் 2 வில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் நேற்று (30.10.2022) தென் ஆப்பிரிக்க அணியை சந்தித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்திருந்தனர்.
இருவரும் அரை சதமடித்திருந்த நிலையில், இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எட்டிப் பிடித்திருந்தது. இந்த நிலையில், போட்டிக்கு நடுவே இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் செய்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலாகி வருகிறது.
டி 20 உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள சாஹல், இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. ஆனால், அதே வேளையில் அவர் வெளியே இருந்து செய்யும் விஷயங்கள் அதிக அளவில் கேமராவில் வைரலாகும். மைதானத்தில் அவர் உட்கார்ந்திருக்கும் விதம் கூட சமீபத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது.
அந்த வகையில் அணியில் இல்லாத சாஹல், வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க சென்றிருந்தார். இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது சென்ற சாஹல், போட்டி நடுவர்களிடம் ஜாலியாக அவர்களை அடிப்பது போல சைகை காட்டி விளையாடி கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில், சாஹலின் குசும்புத்தனம் பற்றி நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
When umpire is your friend #chahal pic.twitter.com/gTUBmE3Wnl
— Ronit Chugwani (@ChugwaniRonit) October 30, 2022

மற்ற செய்திகள்
