IndParty

'பாராட்டி தள்ளிய இந்திய ஆல் ரவுண்டருக்கு’... ‘நடராஜனின் அசத்தல் ரிப்ளை’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 09, 2020 05:52 PM

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜன் டி20 தொடர் வெற்றி மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Natarajan replied to hardik pandya and about t20 series win

தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, 3-வது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை நடராஜன் வீழ்த்தினார்.

டி20 தொடரிலும் இடம்பெற்ற நடராஜன், முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், 2-வது டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளையும், கடைசிப் போட்டியில் ஒரு விக்கெட்டையும் துல்லியமான யார்க்கரால் வீழ்த்தினார். இந்திய அணி டி20 தொடரை வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது மட்டும் இல்லாமல், இவரின் எளிமை மற்றும் பந்துவீச்சு திறமையால், அனைவரின் பாராட்டுக்களையும், ஆதரவையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை இந்திய அணி வென்றது குறித்தும், தனது பந்துவீச்சு குறித்தும் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘இந்திய அணியுடனான எனது முதல் பயணம் மற்றும் டி20 தொடரில் நாங்கள் வென்றது எனக் கடந்த சில மாதங்களாக நடப்பவை எல்லாம் கனவு போல இருக்கிறது.

வெற்றியாளர்களின் குழுவால் கனவு நனவான தருணம் விஷேசமானதாகி இருக்கிறது. தொடர்ந்து ஆதரவையும், ஊக்கமும் அளித்த என்னுடைய அணியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்று நடராஜன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொடர் நாயகன் கோப்பையை கொடுத்த கையோடு, நேரில் மற்றும் ட்விட்டரில் பாராட்டிய ஹர்திக் பாண்ட்யாவிற்கு நன்றி சகோதரா என்று நடராஜன் பதில் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Natarajan replied to hardik pandya and about t20 series win | Sports News.