VIDEO: ‘லட்டு மாதிரி கெடச்ச வாய்ப்பு’.. இப்டி ‘மிஸ்’ பண்ணிட்டீங்களே.. விளாசும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதனை அடுத்து நடந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை தக்க வைத்தது. இந்த நிலையில் கடைசி டி20 போட்டி இன்று (08.12.2020) சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணியை பொருத்தவரை வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும், நடராஜன், சர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியில் ஸ்டம்பிங் ஒன்றை கே.எல்.ராகுல் தவறவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வாசிங்டன் சுந்தர் வீசிய ஒரு ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் க்ரீஸை விட்டு இறங்கி பந்தை அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் பின்னே சென்றது. இதனால் அவரை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்க வாய்ப்பு கிடைத்தது.
#KLRahul misses an opportunity but that doesn't prove costly as Smith is eventually bowled giving Sundar his 2nd scalp of the encounter n India the needed momentum! #indvsausT20 #T20I Saha Siraj Kohli pic.twitter.com/J05oIQAf07
— Tejas Pujare (@tejas_pujare) December 8, 2020
ஆனால் பின்னே வந்த பந்தை விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுல் கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார். இதன்மூலம் ஸ்மித் அவுட்டிலிருந்து தப்பினார். இதனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனியுடன் ராகுலை ஒப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Washington Sundar dint get help from #KLRahul to stump #SteveSmith out 😪 but didn't give up n bowled him out 🤔😂#INDvAUS #AUSvIND #indvsausT20#Natarajan #Sundar pic.twitter.com/dWX7MKiiPZ
— Anil Bhattar (@AnilBhattar2) December 8, 2020
🦁🦁🦁 MSD 🦁🦁🦁
No one can replace 🏆#Dhoni #KLRahul #INDvsAUS pic.twitter.com/agUlwuYqJW
— S A C H I N (@ItsMeRo45) December 8, 2020
Lo
.
.#MSDhoni #KLrahul #INDvsAUS #indvsausT20 pic.twitter.com/5CJCuQRnpH
— 12th_man (@mevardhan_) December 8, 2020