'தோனியை மிஸ் செய்வதாக’... ‘ஏக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்’... ‘சைகையால் பதில் சொன்ன கேப்டன் விராட் கோலி’... ‘வைரலாகும் வீடியோ’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய டி20 போட்டியில் தோனியை மிஸ் செய்வதாக ரசிகர்கள் காட்டிய பதாகைகளுக்கு, விராட் கோலி தானும் தான் என்று சைகை காட்டியதுபோல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் அரையிறுதிப்போட்டியில், நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார் முன்னாள் கேப்டன் தோனி. அந்தப் போட்டியில் கடைசி வரை நின்று போராடிய தோனி, அவுட் ஆனதும் கண்கள் கலங்க சென்றது, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வியுற்றப் பின்னர், எந்த சர்வதேசப் போட்டியிலும் முன்னாள் கேப்டன் தோனி பங்குபெறாமல் இருந்தார்.
இதற்கிடையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் பங்குபெறுவதற்காக, துபாய் செல்வதற்கு முன்னர், சென்னைக்கு வந்த தோனி, அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்தார். இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், சிட்னியில் நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 2-வது டி20 தொடர் நடைபெற்றது.
இதில் ஹர்திக் பாண்ட்யா, நடராஜன் அதிரடியால், இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும், தோனியின் ஆலோசனை இல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலி தடுமாறுவதாக முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை வருத்தம் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில் போட்டியின் நடுவே, தோனியின் ரசிகர்கள் அவரை மிஸ் செய்வதாக பதாகைகளை காட்டினர். இதனைப் பார்த்த கேப்டன் விராட் கோலி, தானும் தான் அவரை மிஸ் செய்கிறேன் என்று சைகையில் காட்டியதாக, தோனியின் ரசிகர்கள் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். உண்மையில் இது நடந்ததா என்று ட்விட்டரில் ஒருத்தர் கேட்க, ஆமாம் என்று அவருக்கு ட்விட்டர்வாசிகள் பதில் அளித்தனர்.
Even @imVkohli Too Miss Our Master @msdhoni 😖#MSDhoni | #Dhoniforlife @DhoniArmyTN | @TeluguMSDians pic.twitter.com/gW5d4pjTKt
— MSD Kingdom™ (@MSDKingdom) December 7, 2020
— 🌸 (@Sumanth12661041) December 7, 2020

மற்ற செய்திகள்
