"என்னது இந்த டீம்தான் சாம்பியன் ஆகுமா... இது புதுசால்ல இருக்கு???" - வெற்றி வாய்ப்பு குறித்து பிரபல வீரர் கூறும் கணிப்பும் காரணமும்...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 13வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தன் கணிப்பைக் கூறியுள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த சீசனில் முதன்முதலாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஆர்சிபி, டெல்லி அணிகள் முதல் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளன. அதேவேளையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே 3 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த சீசனில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தன் கணிப்பைக் கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், "டி20 கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெரும் எனக் கணிப்பது மிகவும் கடினம். ஆனால் நான் ஆர்சிபி அணிக்கு வாய்ப்புள்ளது என்பேன்.
அந்த அணியின் கோலி, டிவில்லியர்ஸ், சாஹல் ஆகியோர் சிறந்த வீரர்கள். நவ்தீப் சைனி அருமையாக பந்து வீசுகிறார். அதனால் இந்த சீசனில் அந்த அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வளர்வதை பார்க்க விரும்புகிறேன். ஆர்சிபி தான் வெற்றி பெறும் என உறுதியாக கூற முடியாவிட்டாலும், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஆர்சிபி கண்டிப்பாக ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
