‘இப்டி அவசரப்பட்டீங்களே பாஸ்’.. கடைசியில அந்த மனுஷனையும் ‘கோவப்பட’ வச்சிட்டீங்களே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி வார்னர், பேர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ, தீபக் சஹர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே 5 பவுண்டரிகள் உட்பட 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
#CSKvSRH #CSK pic.twitter.com/Q42D5xBN4q
— Mohammed Aziz (@iaziz07) October 2, 2020
This was after being run out!
.#CSKvSRH #IPL2020 pic.twitter.com/IKaq0r0Ile
— Cricket Cult (@CultCricket) October 2, 2020
இதனை அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் வார்னர் 28 ரன்களில் அவுட்டாக, அடுத்து கேன் வில்லியம்சன்னும் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 9 ரன்னில் அவுட்டானார். இதனால் வில்லியம்சம் சற்று கோவமானார். வில்லியம்சனின் எதிர்பாராத ரன் அவுட் ஹைதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
