திரும்ப வந்த ‘ஸ்டார்’ ப்ளேயர்.. அப்போ இன்னைக்கு போட்டியில ‘அவர’ பாக்கலாமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வி பெற்றதால் சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அம்பட்டி ராயுடு 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இதன்பின்னர் காயம் காரணமாக அடுத்த 2 போட்டிகளில் அம்பட்டி ராயுடு இடம்பெறவில்லை. மேலும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என ரசிகர்கள் தங்களது அதிர்ப்தியை வெளிப்படுத்தி வந்தனர். அதனால் இன்றைய போட்டியில் அம்பட்டி ராயுடு விளையாடுவாரா என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
Nothing but Ambatting Rayudu! 😍 #WhistlePodu #WhistleFromHome #Yellove #CSKvSRH @RayuduAmbati pic.twitter.com/kbY47TFobN
— Chennai Super Kings (@ChennaiIPL) October 2, 2020
இந்த நிலையில் அம்பட்டி வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதனால் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. அதேபோல் இதுவரை இந்த சீசனில் விளையாடமல் இருந்த பிராவோவும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
A #yellove'ly chance for the Champion dance. 🦁💛 #WhistlePodu #WhistleFromHome #CSKvSRH pic.twitter.com/LQiVUVTFsn
— Chennai Super Kings (@ChennaiIPL) October 2, 2020

மற்ற செய்திகள்
