WATCH: 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ‘அதே’ சம்பவம்.. என்னவொரு ‘அதிசயம்’!.. அதுவும் அவர் கையாலேயே நடந்திருக்கு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 01, 2020 10:21 PM

பஞ்சாப் மற்றும் மும்பை இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று அபு தாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Maxwell and Jimmy Neesham stunning catch to dismiss Rohit Sharma

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். இதில் காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே டி காக் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Maxwell and Jimmy Neesham stunning catch to dismiss Rohit Sharma

அடுத்தடுத்து இரண்டு வீரர்கள் அவுட்டானதால் கேப்டன் ரோஹித் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 70 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி வீசிய ஓவரில் நீஷமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை பவுண்டரி லைனில் நின்ற மேக்ஸ்வெல் கேட்ச் பிடிக்க முயன்று நீஷமிடம் தூக்கி வீசினார். கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ரோஹித் ஷர்மாவை இதேபோல் கேட்ச் பிடித்து மேக்ஸ்வெல் அவுட் செய்திருப்பார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பொல்லார்ட் (47) மற்றும் ஹர்திக் பாண்ட்யா (30) அதிரடி ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. இந்த நிலையில் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maxwell and Jimmy Neesham stunning catch to dismiss Rohit Sharma | Sports News.