'இந்த ஐபிஎல் சீசன்ல'... 'அவரு விளையாடுவாரா, மாட்டாரா?'... 'அணியின் தோல்விக்குப்பின்'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான புது அப்டேட்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்களின்றி நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், தந்தையின் உடல்நிலை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
இதையடுத்து நியூசிலாந்திலுள்ள பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கியபோதும் ஐக்கிய அரபு அமீரகம் திரும்பவில்லை. இதனால் அவர் முதல் பாதி தொடரில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து பேசியுள்ள அணியின் ஆலோசகர் ஷேன் வார்னே, "எப்படியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு. எங்களுடைய நினைப்பு அவருடன் இருக்கிறது.
பென் ஸ்டோன்ஸ் அணியில் இருக்கும்போது அணி மிகவும் வலுவானதாக தோன்றும். ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களம் இறங்குவது எனக்கு பிடித்திருக்கிறது. சிறந்த வீரர்களுக்கு அதிகமாக பந்துகள் சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். என்னை பொறுத்த வரைக்கும் பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களில் களம் இறங்குவது சரியானதே" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
