நடிகையை கொன்று உடலை ஆற்றில் வீசிய மகன்.. சொத்து தகராறா? பாலிவுட்டை அதிரவைத்த கொடூர சம்பவம்..! VEENA KAPOOR

முகப்பு > செய்திகள் > இந்தியா

By K Sivasankar | Dec 13, 2022 10:18 AM

பாலிவுட்டில் திரைப் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் இருந்தவர் நடிகை வீணா கபூர். 74 வயதான இவர், மும்பையில் வசித்து வந்த நிலையில் இவரை இவரது சொந்த மகனே கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட்டை அதிரவைத்துள்ளது.

grandson accused in 74 yrs old actress veena kapoor death

Also Read | "எனக்கு என்ன நடந்துச்சோ.. அவங்களுக்கும் அது நடக்கணும்".. பாக். பவுலருக்கு ரிஸ்வான் போட்ட ஆர்டர்.. வீடியோ..!

மும்பை ஜுஹு பகுதியில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகை வீணா கபூருக்கு 2 மகன்கள். இவர்களுள் மூத்தமகன் அமெரிக்காவில் செட்டிலாகிய நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று வீணா கபூருக்கு பலமுறை போன் செய்தும், போனை யாரும் எடுக்காததால், உறவினருக்கு போன் செய்து உடனே விட்டிற்கு சென்ற பார்க்க சொல்லி இருக்கிறார். இதனை அடுத்து வீட்டிற்கு  சென்று அவர்களது உறவினர் பார்த்தபோது, அங்கு வீணா கபூரை காணவில்லை. பின்னர் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்துவீணா கபூரின் 43 வயதான இளைய மகன் சச்சினை போலீஸார் விசாரிக்க, முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த சச்சின், பின்னர் தனது தானே பேஸ்பால் பேட்டால் அடித்து கொலை செய்தததாகவும், இதில் வீணா கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் பின்னர் வீணா கபூரின் உடலை 90 கி.மீ தூரத்தில் இருக்கும் ஆற்றில் வீசியதாக சச்சின் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், இவை அனைத்தையும் வீணா கபூருடனான ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்து தகராறு காரணமான வாக்குவாதத்தின்போது சச்சின் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

grandson accused in 74 yrs old actress veena kapoor death

இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து சச்சின் மற்றும் வீணா கபூரின் உடல் பாகங்களை மறைக்க அவருக்கு உதவிய, அவரது வீட்டு பணியாளர் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read | Annamalai: "அங்க கைகட்டி நின்னு கும்பிட்டாதான் படம் ரிலீஸ்... அந்த நடிகரின் படம் மட்டும்தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போகுது" .. அண்ணாமலை பேச்சு..

Tags : #ACTRESS VEENA KAPOOR DEATH #ACTRESS VEENA KAPOOR SON

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Grandson accused in 74 yrs old actress veena kapoor death | India News.