'உனக்காக ஒரு மாநிலமே அழுகுது பா'...'30 பேரை' காப்பாத்த 'நாய் செய்த தியாகம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 13, 2019 03:51 PM
உத்தரபிரதேசத்தில் நாய் ஒன்று தீ விபத்திலிருந்து 30 பேரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் பண்டா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கீழ் தளத்தில் நாற்காலிகள், மேஜைகள் செய்யும் தொழிற்சாலையும், இரு மாடிகளிலும் உள்ள குடியிருப்பில் மக்களும் வசித்து வந்தனர்.நேற்று அதிகாலையில் மக்கள் அசந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.அந்த நேரத்தில் கீழ்தளத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகள் செய்யும் தொழிற்சாலையில், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு மெல்ல தீ பரவியுள்ளது.அப்போது அங்கு இருக்கும் குடியிருப்பு வாசிகளால் வளர்க்கப்படும் நாய் ஒன்று குரைக்க தொடங்கியது.
சிறிது நேரத்தில் நாயானது விடாமல் குரைத்து கொண்டே இருந்தது.இதனால் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட மக்கள் வெளியே வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்கள்.உடனே, தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்த குடியிருப்புவாசிகள் அனைவரும், வீட்டில் இருந்து தப்பி ஓடி உயிர்பிழைத்தனர்.
இந்நிலையில் தங்கள் அனைவரின் உயிரை காப்பாற்றிய நாயினை காப்பாற்றுவதற்குள் தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.இந்த கோர சம்பவத்தில் அந்த நாய் பரிதாபமாக தனது உயிரை இழந்தது.30 பேரின் உயிரை காப்பாற்றிய நாயின் உயிரை தங்களால் காப்பாற்ற முடியவில்லையே என குடியிருப்புவாசிகள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.