"நம்ம புது 'லுக்' எப்படி??.." தீபக் சாஹர் வெளியிட்ட 'புகைப்படம்'.. "ஒஹோ, இதுக்கு தான் 'ரெடி' ஆகுறீங்க போல!.." 'ரெய்னா' போட்ட அசத்தல் 'கமெண்ட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வந்த 14 ஆவது ஐபிஎல் தொடர், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், பாதியில் நிறுத்தப்பட்டது.

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், செப்டம்பர் முதல் அக்டோபர் வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் (Deepak Chahar), தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். பவர்பிளே ஓவர்களை சிறப்பாக வீசுவதில் வல்லமையுள்ள தீபக் சாஹர், இந்த சீசனில் இதுவரை, 7 போட்டிகள் விளையாடி 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தீபக் சாஹர் பதிவிட்டுள்ளார். மேலும், தனது கேப்ஷனில், 'புதிய லுக்' என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் அதிக முடியுடன் இருக்கும் தீபக் சாஹர், தனது புதிய லுக்கில், மொத்தமாக ட்ரிம் செய்த தலையுடன் போஸ் கொடுத்துள்ளார். முற்றிலும் யாரும் பார்த்திடாத ஒரு கெட்அப்பில் தீபக் சாஹர் பதிவிட்ட புகைப்படத்திற்கு, ரசிகர்கள் பலர், பல விதமான கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
New look 😈 pic.twitter.com/uVhCp9Ai9P
— Deepak chahar 🇮🇳 (@deepak_chahar9) June 9, 2021
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா (Suresh Raina), தீபக் சாஹரின் புகைப்படத்திற்கு, அசத்தலான கமெண்ட் ஒன்றைச் செய்துள்ளார். 'பேமிலி மேன் பார்ட் 3 ஆன் தி வே' என தனது கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
Family part 3 on the way bro ! 🙌👀
— Suresh Raina🇮🇳 (@ImRaina) June 9, 2021
ஹிந்தியில், மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், 'பேமிலி மேன்' வெப் தொடரின் இரண்டாவது சீசன், OTT தளமான அமேசானில், சமீபத்தில் வெளியாகியிருந்தது. மூன்றாவது சீசனும் அடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து தான் ரெய்னா தனது கமெண்ட்டை குறிப்பிட்டுள்ளார். இந்த கமெண்ட், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
