இதுக்கு மட்டும் நான் பதில் சொன்னா என் ‘சம்பளம்’ கட் ஆகிடும்.. சர்ச்சையில் சிக்காமல் நேக்கா ‘எஸ்கேப்’ ஆன மயங்க்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசெய்தியாளர்கள் எழுப்பிய சர்ச்சை கேள்விக்கு மயங்க் அகர்வால் சாதுர்யமாக பதிலளித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். இவர்கள் இருவரும் ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான கூட்டணியை அமைத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்தது. இதில் மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 122 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்த சூழலில் மயங்க் அகர்வால் அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லுங்கி நிகிடி வீசிய ஓவரில் மயங்க் அகர்வால் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார். ஆனால் இது நாட் அவுட் மாதிரி இருந்ததால், உடனே மூன்றாவது அம்பயரிடம் மயங்க அகர்வால் ரிவியூ கேட்டார். ஆனால் மூன்றாம் அம்பயரும் அவுட் என அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த மயங்க அகர்வால் கோபமாக பெவிலியன் திரும்பினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மயங்க் அகர்வாலிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்த அவுட் முடிவு குறித்து கருத்து கூற எனக்கு அனுமதி கிடையாது. அதை அப்படியே விட்டு விடுங்கள். இல்லை என்றால் நான் விதியை மீறியவனாவேன். பின்னர் என்னுடைய சம்பளமும் முடக்கப்படும்’ என மயங்க் அகர்வால் சாதூர்யமாக முடித்துக் கொண்டார்.

மற்ற செய்திகள்
