அப்பாடா... கூகுள் MAP ல வரவிருக்கும் புது ஆப்ஷன்.. இனி டிராவல் இன்னும் ஈஸியா இருக்கும்..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்கூகுள் மேப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது அந்த நிறுவனம். இதனால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கூகுள் மேப்
புதிய பாதைகளை கண்டறிவது நம்முடைய வாழ்க்கையை எப்போதும் சுவாரஸ்யமாக மாற்றும். அப்படியான நெடுந்தூர பயணங்களின் போது பாதைகளை கண்டறிய ஆதிகாலம் முதலே மனிதன் புவியியல் வரைபடத்தை பயன்படுத்தி வந்தான். டெக்னாலஜி துறையில் மனித குலம் முன்னேற முன்னேற நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அதற்க்கு ஏற்றாற்போல மாறின. அந்த மாற்றத்தின் விளைவாக தற்போது கூகுள் மேப் என்னும் டிஜிட்டல் வழிகாட்டி கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த மேப்பை பயன்படுத்திவருகின்றனர். உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது.
இந்நிலையில் கூகுள் மேப்பில் புதிய வசதிகளை அளிக்க இருக்கிறது அந்த நிறுவனம். இந்த மாதம் இந்த சேவைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வசதிகள்
கூகுள் மேப்பில் நீங்கள் தேடும் வழிகளில் இருக்கும் டோல்கேட் கட்டணங்களை தெரிந்துகொள்ளும் வசதியை அளிக்க இருக்கிறது கூகுள். டோல் பாஸ் அல்லது நாள் மற்றும் நேரம் போன்றவற்றின் அடிப்படையில் கூகுள் கட்டணத்தை மதிப்பிடும். இதன் மூலம் தோராயமாக நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
மேலும், நீங்கள் டோல் செலுத்த விரும்பவில்லை என்றால், உங்களுக்கான மாற்று வழிகளையும் கூகுள் காட்டும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துவக்கத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு இந்த சேவை அளிக்கப்படும் எனவும், விரைவில் பல நாடுகளுக்கு சேவை விரிவுபடுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல், டிராஃபிக் லைட்ஸ், சாலையின் அகலம் போன்றவற்றையும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த புதிய சேவைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
