VIDEO: 'ஹெலிகாப்டர்' ஷாட் தெரியும்... ஆனா 'இது' என்ன ஷாட்னு சத்தியமா 'தெர்ல' பாஸ்?... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட்டின் தல என புகழப்படும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பற்றி குட்டிக்குழந்தைகளுக்கு கூட தெரியும். அந்தளவுக்கு அவரின் ஹெலிகாப்டர் ஷாட் மிகவும் பிரபலம். அவ்வளவு ஏன் கடைசியாக அவர் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து போட்டியை முடித்து வைப்பதை நேரில் பார்ப்பதற்காக மைதானத்திற்கு படையெடுத்த ரசிகர்கள் ஏராளம்.

அவரைப்போல இளம் வீரர்கள் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது வித்தியாசமான ஷாட் ஒன்று பிரபலமாகி வருகிறது. உள்ளூர் மைதானமொன்றில் கிரிக்கெட் விளையாடும் வீரர் ஒருவர், பந்து வரும்போது கால்களை தூக்கி பின்னால் அடித்து தெறிக்க விடுகிறார்.
Every cricketers pls try this pic.twitter.com/t84WBcB70H
— Naresh Choudhary (@NareshC73007846) March 6, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் இதற்கு என்ன பெயராக இருக்கும் என தீவிரமாக யோசித்து வருகின்றனர். சொல்ல முடியாது இதேபோல ஐபிஎல் போட்டிகளில் கூட யாராவது ஒரு வீரர் விளையாடி தெறிக்க விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
