இப்டியே 'விசில்' அடிக்க போறேன்... '75 வயசு' பாட்டி செய்த வேலை... 2K கிட்ஸ்க்கே செம டப் 'குடுப்பாங்க' போல!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 07, 2020 11:01 PM

ஐபிஎல் போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி தொடங்கவுள்ளன. இதையொட்டி அனைத்து அணிகளும் தீயாய் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பயம் இருந்தாலும் கூட கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மறுபுறம் தங்கள் பேவரைட் அணியின் டீஷர்ட்டை போட்டுக்கொள்வது, சமூக வலைதளங்களில் பிடித்த வீரர்களின் புகைப்படங்களை வைத்துக்கொள்வது என ரசிகர்களும் பயங்கர லந்து செய்து வருகின்றனர்.

IPL 2020: 75 Year old Grandmother\'s Haircut Picture, goes Viral

இந்த நிலையில் சென்னை அணியின் ரசிகையான 75 வயசு பாட்டி ஒருவர் தன்னுடைய தலையில் தோனி பெயரை எழுதி தோனி மீதான தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை அவரின் பேத்தி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட தற்போது அந்த புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பாட்டி வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க!