'ஆபரேஷன் செய்ய 'தலையை திறந்தால்'... 'இதெல்லாமா இருக்கும்'... 'உறைந்து போன மருத்துவர்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Jeno | Jun 08, 2019 10:59 AM
மருத்துவ உலகில் அரிதினும் அரிதாக சில சம்பவங்கள் நடக்கும்.அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நியூயார்கில் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பால்மா என்றொரு பெண்,கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.அதோடு அவ்வப்போது கற்பனையான தோற்றங்களும் தோன்றி மறைவதாக கூறியுள்ளார்.மேலும் காபி அருந்த நினைத்தால் கூட,காபி கோப்பையை பிடிக்க முடியாமல் கை நடுங்குவதாகவும், யாருக்காவது மெசேஜ் அனுப்ப நினைத்தால் கூட அனுப்ப முடியவில்லை என வேதனை பட்டு வந்துள்ளார்.அலுவலகம் செல்லும் போது வீட்டினை பூட்ட மறந்து செல்வது,வேலை செய்யும் இடத்தில் கூட பல குழப்பங்கள் என மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பால்மாவின் நிலையினை அறிந்த அவரது பெற்றோர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்கள்.இதனால் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதிக்க முடிவு செய்தார்கள். இதையடுத்து பால்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கேன்சர் கட்டி இருப்பதாக கூறியுள்ளார்கள். அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே அறுவை சிகிச்சை செய்ய மண்டை ஓட்டினை திறந்த போது தான், மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.காரணம் பால்மாவின் தலையில் இருப்பது கேன்சர் கட்டி அல்ல, நாடாபுழுகள் தான் வளர்ந்திருக்கின்றன என்பது தெரியவந்தது.இதையடுத்து அதனை அகற்றிய மருத்துவர்கள்,இது மிகவும் அரிதான ஒன்றுதான் அனைவருக்கும் இதுபோன்று நடக்கும் என கூற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.அறுவை சிகிச்சைக்கு பின்பு பால்மா நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.