VIDEO : "அவருக்கு இன்னும் வயசு ஆகல"... ஜான்ட்டி 'ரோட்ஸ் பிடித்த 'வேற' லெவல் 'கேட்ச்'... 'வாவ்' மோடிற்கு சென்ற 'கிரிக்கெட்' ரசிகர்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
![kxip releases a video where jonty rhodes takes an marvelous catch kxip releases a video where jonty rhodes takes an marvelous catch](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/kxip-releases-a-video-where-jonty-rhodes-takes-an-marvelous-catch.jpg)
அனைத்து அணி வீரர்களும் துபாயில் மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் (Jonty Rhodes) சில கேட்ச்களை டைவ் அடித்து மிகவும் அற்புதமாக எடுக்கிறார்.
ஒட்டு மொத்த கிரிக்கெட் உலக வரலாற்றில் சிறந்த ஃபீல்டராக கருதப்படும் ஜான்ட்டி ரோட்ஸ், தற்போது 51 வயது ஆன போதிலும், முன்பு தான் ஆடிய அதே வேகத்துடன் தற்போதும் காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர், சில விஷயங்கள் ஒரு போதும் மாறப் போவதில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.
Did you ‘catch’ that? 😮#SaddaPunjab #Dream11IPL @JontyRhodes8 pic.twitter.com/VmrCnQtgBZ
— Kings XI Punjab (@lionsdenkxip) September 14, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)