VIDEO : 'PRACTICE' 'மேட்ச்'லயே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல... ரோகித் அடித்த 'சிக்ஸர்'... "போய் விழுந்த இடம் தான் ஹைலைட்டே..." - வைரலாகும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐ.பி.எல் போட்டிகள் துபாயில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், செப்டம்பர் 19 ஆம் தேதியன்று முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

அனைத்து ஐ.பி.எல் அணி வீரர்களும் துபாயில் மிகவும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் வீரராகள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பந்து ஒன்றை சிக்சருக்கு விரட்ட, அது சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது பட்டது.
மேலும், அந்த வீடியோவில் அங்கிருந்த அணியினரில் ஒருவர், ரோகித் அடித்த பந்து பேருந்தின் கண்ணாடியை உடைத்ததா இல்லையா என கேட்கின்றனர். ரோகித் அடித்த இந்த சிக்ஸர், 95 மீட்டர் உயரத்திற்கு சென்றது. ஐ.பி.எல் போட்டிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இது போன்ற பயிற்சி வீடியோக்களில் வரும் சிக்ஸர்கள் கூட ஐ.பி.எல் ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
வீடியோவைக் காண :
🙂 Batsmen smash sixes
😁 Legends clear the stadium
😎 Hitman smashes a six + clears the stadium + hits a moving 🚌#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 pic.twitter.com/L3Ow1TaDnE
— Mumbai Indians (@mipaltan) September 9, 2020

மற்ற செய்திகள்
