'ஐபிஎல்' போட்டியில் காலடி எடுத்து வைக்கும் முதல் 'அமெரிக்க' வீரர்... "எந்த 'டீம்'ல ஆட போறாரு??.." - முழு விவரம் உள்ளே!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளரான ஹாரி கர்னி (Harry Gurney) காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரராக அமெரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த அலி கான் (Ali Khan) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் போட்டி வரலாற்றில் அமெரிக்க கிரிக்கெட் வீரர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். கரீபியன் பிரீமியர் லீக் தொடர் உட்பட பல டி20 தொடர்களில் அலி கான் பங்கேற்று சிறப்பான பந்து வீச்சு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். மிகவும் வேகமாக பந்து வீசக் கூடிய அலி கான், யார்க்கர் பந்துகள் வீசுவதில் திறம் படைத்தவராவர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ வழியாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஐபிஎல் ஏலத்தின் போது தனது பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், ஐபிஎல் விளையாடுவது என்பது கனவு நிஜமாகும் தருணம் என அலி கான் குறிப்பிட்டிருந்தார்.

மற்ற செய்திகள்
