VIDEO : 'மும்பை' இந்தியன்ஸ் வெளியிட்ட 'வீடியோ',,.. "என்னடா, ஸ்பின் 'பவுலிங்' எல்லாம் போடுறாரு??.." 'ஷாக்' ஆன ரசிகர்கள்... மெர்சல் காட்டிய 'பும்ரா'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

வரும் 19 ஆம் தேதியன்று ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணி வீரர்களும் துபாயில் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சி தொடர்பான வீடியோக்களை அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் வருகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மொத்தம் ஆறு பந்து வீச்சாளர்களை போல பந்து வீசுகிறார்.
அவர்கள் யார் என உங்களால் கணிக்க முடிகிறதா எனவும் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளனர். அந்த ஆறு பேர் யார் என ரசிகர்கள் பல பந்து வீச்சாளர்கள் பெயரை கமெண்ட் செய்து வருகின்றனர். முனாப் படேல், கிளென் மெக்ராத், மிச்சல் ஸ்டார்க், கேதார் ஜாதவ், மலிங்கா, ஜான்சன் என பலரது பெயர்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
📹 Can you guess all 6️⃣ bowlers Boom is trying to imitate? 🤔
PS: Wait for the bonus round 😉 #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @Jaspritbumrah93 pic.twitter.com/RMBlzeI6Rw
— Mumbai Indians (@mipaltan) September 7, 2020

மற்ற செய்திகள்
