"இது என்னடா 'சி.எஸ்.கே'க்கு வந்த சோதனை",,.. 'ரெய்னா'வை தொடர்ந்து விலகும் மற்றொரு 'வீரர்',,.. வெளியான பரபரப்பு 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 19 ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான அட்டவணை இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஹர்பஜன் சிங் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவும், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிய நிலையில், அவரும் ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
தற்போது, ஹர்பஜன் சிங்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், சென்னை அணிக்கு இது சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டி சி.எஸ்.கே அணி துபாய் வந்த போது, சென்னை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனைகள் முடிவில் நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
