'விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி!'.. யார்க்கர் கிங் நடராஜனுக்கு பிசிசிஐ கொடுத்த 'சர்ப்ரைஸ்'!.. திடீரென எடுக்கப்பட்ட முடிவு!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழகத்தை சேர்ந்த இளம் யார்க்கர் கிங் நடராஜன் தற்போது இந்திய டி 20 அணியில் இடம் பிடித்துள்ளார்.
2020 ஐபிஎல் தொடர் பல திறமைகளை கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் பெரிய அளவில் இந்த சீசனில் விளையாடாத நிலையில் முழுக்க முழுக்க உள்ளூர் வீரர்கள்தான் சிறப்பாக கலக்கி வருகிறார்கள்.
அதிலும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளார். பிரட்லீ போன்ற ஜாம்பவான் வீரர்கள் பாராட்டும் அளவிற்கு நடராஜன் பந்து வீசி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் இவர் பெயர் இடம்பெற்று இருந்தது. ஆடும் அணியில் இடம்பெறாமல், வலைப்பயிற்சியில் பவுலிங் செய்யும் குழுவில் இவர் பெயர் இடம் பெற்று இருந்தது.
இதனால் இவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்வார், அதே சமயம் வலைப்பயிற்சியில் மட்டுமே ஈடுபடுவார், ஆடும் அணியில் இடம்பெற மாட்டார் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, இளம் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு 15 பேர் கொண்ட இந்திய டி 20 அணியில் இடம் கிடைத்தது. இதனால், அவருக்கு 11 பேர் கொண்ட ஆடும் அணியில் விளையாடும் வாய்ப்பும் கை கூடி வந்தது.
இவரின் ஸ்பின் பவுலிங் சிறப்பாக இருந்த காரணத்தால், இந்திய அணியில் நேரடியாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்போது வருண் சக்ரவர்த்தி காயம் காரணம் அவதிப்பட்டு வருவதால், அவர் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் காயத்தோடு இந்த சீசன் முழுக்க ஐபிஎல்லில் விளையாடி இருக்கிறார். இதனால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய டி 20 அணியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது. இவர் நெட் பவுலராக தேர்வாகி இருந்த நிலையில் தற்போது 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்துள்ளது.
டெத் ஓவர்களில் யார்க்கர் வீசுவது, முக்கியமான கட்டத்தில் ஸ்லோ பால் புல் டாஸ் போட்டு விக்கெட் எடுப்பது என்று நடராஜன் கலக்கி வருகிறார்.
ஒவ்வொரு போட்டியிலும் ரன் செல்வதை கட்டுப்படுத்தி நடராஜன் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார்.
நடராஜனுக்கு இது மிக முக்கியமான தொடராக இருக்க போகிறது. ஏனெனில், நடராஜன் இந்திய அணியின் பயிற்சி குழு மூலம் நேரடியாக் பயிற்சி அளிக்கப்படுவார்.
இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் நடராஜனின் கிரிக்கெட் எதிர்காலத்தை மொத்தமாக மாற்ற போகிறது என்கிறார்கள்.