கெயிலை கடுப்பேற்றிய அந்த சம்பவம்... ஈகோவை சீண்டியதால் களத்தில் அதிரடி!.. ஓய்வு முடிவை எடுக்கும் யுனிவர்சல் பாஸ்?.. 'இது' தான் காரணம்!.. அதிர்ச்சி பின்னணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார் என்கிறார்கள். நேற்று இவர் செய்த டிவிட் ஓய்வு குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல மூத்த வீரர்களுக்கு 2020 ஐபிஎல் தொடர்தான் கடைசி தொடர். ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக வாட்சன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இன்னும் பல வீரர்கள் இந்த தொடரின் முடிவில் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். வயோதிகம் காரணமாகவும், ஐபிஎல் தொடரில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் காரணமாகவும் இவர் ஓய்வு பெறப் போகிறார் என்கிறார்கள்.
நேற்று இவர் செய்த டிவிட் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. கெயில் செய்த டிவிட்டில், என்னுடைய சீசன் முடிந்துவிட்டது. ஆனாலும் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து பாருங்கள். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தான் ஓய்வு பெற போகிறேன் என்பதைத்தான் கெயில் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.
கெயிலுக்கு தற்போது 41 வயது ஆகிறது. வயது ஆனாலும் கூட, களத்தில் இவர் இன்னும் முழு பார்மில்தான் இருக்கிறார். வயது குறித்து எந்த விமர்சனமும் வைக்க முடியாத அளவிற்கு சிறப்பாக ஆடி வருகிறார்.
அதிலும் வரிசையாக இந்த ஐபிஎல் தொடரில் இவர் மூன்று முறை அரை சதம் அடித்தார். ஒருமுறை சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ரன்னில் நழுவவிட்டார். ஆனாலும் இவர் இந்த தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என்கிறார்கள்.
முதல் விஷயம் வயோதிகம். இரண்டாவது விஷயம், இந்த தொடரில் கெயிலை பஞ்சாப் அணி தொடக்கத்தில் புறக்கணித்தது. அணியில் எடுத்துவிட்டு, முதல் 7 போட்டிகளில் வாய்ப்பே கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தது.
இதனால் பர்சனலாக கெயில் கோபத்தில் இருந்தார். மேக்ஸ்வெல் போன்ற பார்ம் அவுட் வீரர்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுக்கப்பட்டதை பார்த்து, கெயில் கடுப்பாக இருந்தார். இதனால்தான் வாய்ப்பு கிடைத்த மேட்ச்களில் அதிரடி காட்டினார். அதே போல் அடுத்த வருடம் நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் கெயில் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்படலாம். இவரை பஞ்சாப் அணி வயோதிகம் காரணமாக ரீ டெயின் செய்ய வாய்ப்பு இல்லை.
இதனால் அடுத்த வருடம் கெயில் ஏலம் விடப்பட வாய்ப்பு உள்ளது. 2018ல் நடந்த ஏலத்திலேயே கெயிலை யாரும் கூடுதல் விலை கொடுத்து எடுக்க விரும்பவில்லை. பஞ்சாப் அணி கெயிலை அடிப்படை விலையில் எடுக்கவே நினைத்தது. இதனால் அடுத்த சீசனில், கெயில் ஆடுவது சந்தேகம்தான். இதனால்தான் கெயில் நேற்று அப்படி ஒரு டிவிட் செய்தார் என்கிறார்கள்.

மற்ற செய்திகள்
