‘கோலி அப்பவே சுதாரிச்சுகிட்டார்!’.. ‘ஆனா மாட்டிக்கிட்ட ஐபிஎல் அணிக்கு .. இப்ப இந்த நிலை!’ .. வலுக்கும் புகார்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் மோசமான ஆட்டத்திற்கு, அந்த அணி பயிற்சியாளர் கும்ப்ளேதான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2020 ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சென்றுள்ள நிலையில் சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளன. இதனிடையே பஞ்சாப் அணி, கொஞ்சம் தட்டுத் தடுமாறி எழுந்து வந்தாலும் கடைசி 2 போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது.
பஞ்சாப் அணியின் இந்த மோசமான தோல்விக்கு அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேதான் காரணம் என்றும், அணி தேர்வில் ஆதிக்கம், மோசமான திட்டம் வகுத்தல், தன்னிச்சையாக செயல்பட்டது என இவர்தான் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளன.
அணியில் கேப்டன் உட்பட, மூத்த வீரர்கள் வரை யாருக்கும் பெரிதாக சுதந்திரம் இல்லை என்றும் இதனால்தான் ஒவ்வொருமுறையும் ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் கூட பஞ்சாப் தோற்றதாகவும்,
Kohli did the best thing for Indian team by pushing Kumble out. 🤣
— rootofall3vil (@rootofall3vil) October 10, 2020
கும்ப்ளேவின் ஆதிக்கம் தான், பஞ்சாப் அணி எதையும் திட்டமிட முடியாமல போக காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் தேர்வு பெரிய அளவில் சொதப்பிய போது, கும்ப்ளே மீது அப்போதே கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. பின்னர் கோலியின் கடும் முயற்சியால்,
Worst captaincy too. Simran Singh ahead of Maxwell? Total incompetence.
— sazed (@k_elsier) October 10, 2020
கும்ப்ளேவின் ஆதிக்கத்தில் இருந்து இந்திய அணி விடுவிக்கப்பட்டதாகவும், அப்போது கோலி சுதாரித்துக் கொண்டதாகவும், ஆனால் தற்போது பஞ்சாப் அணி அவரிடம் சிக்கியதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.