‘நெக்ஸ்ட் டைம் இப்படித்தான் வருவோம்’... ‘தோல்விக்குப் பின்’... 'உறுதியுடன் ட்வீட்டிய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிளே-ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்றைய போட்டியுடன் தொடரிலிருந்து விலகியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் நம்பிக்கையுடன் ட்வீட் ஒன்று பதிவிட்டு உள்ளார்.

நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. எனினும் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர், தன்னுடைய தடத்தை இந்த சீசனில் சிறப்பாக பதித்துள்ளார். 20 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள 6 பௌலர்களில் ஒருவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதன் எகானமி ரேட் 6.55. மேலும் அந்த அணிக்காக விளையாடி இதுவரை 10 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இதுகுறித்து அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ‘தாங்கள் மீண்டும் வலிமையுடன் வருவோம்’ என்று ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
We come back stronger pic.twitter.com/swzM6IJJ7d
— Jofra Archer (@JofraArcher) November 1, 2020

மற்ற செய்திகள்
