'இது மட்டும் நடந்திட்டா’...!!! 'நமக்கு சான்ஸ் கிடைக்காம’... ‘சோலி முடிஞ்சு போயிருமே கடவுளே’...!! கடைசி லீக் போட்டியில் நடக்கப் போகும் பரபரப்பு...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றுடன் இந்த சீசனின் கடைசி லீக் போட்டி முடிவடைய உள்ளதால், கடைசி அணியாக எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக உள்ளது. இதன் காரணமாக எழுந்துள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் பல்ஸையும் எகிற வைத்துள்ளது.
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு ரசிகர்கள் இன்றி கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்து, முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியை அடுத்து எந்த அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது வந்தது.
பரபரப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் லீக் சுற்றின் 55-வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெல்லும் அணி இரண்டாம் இடம் பெறும் என்ற நிலை இருந்தது. தோற்கும் அணி குறிப்பிட்ட அளவு ரன் குவித்தால் அல்லது எதிரணியை விரைவாக வெற்றி பெறாமல் பார்த்துக் கொண்டால் பிளே-ஆஃப் சுற்றுக்கு, முன்னேறும் நிலை இருந்தது.
ஆனால் எதிர்பாராத திருப்பமாக பெங்களூர் - டெல்லி என் இரு அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில், கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதில் ஹைதராபாத் அணி வென்றால் 14 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி பிளே-ஆஃப் செல்லும். இதனால் போட்டியை வெல்வதற்கு ஹைதராபாத் அணி முனைப்புடன் செயல்படும்.
எனினும் கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் இருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணியை விட குறைவாக இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணியிடம், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து 14 புள்ளிகள் பெறாமல் இருந்தால் மட்டுமே கேகேஆர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதைப் பற்றி தெரிந்துதான் என்னவோ கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன் தங்கள் அணியின் கடைசி லீக் போட்டியின் முடிவில், தங்கள் அணி முடிந்ததை செய்து விட்டோம். இதற்கு மேல் ஆண்டவன் கையில் தான் எல்லாம் உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டி பரபரப்பு பஞ்சம் இருக்காது என்பது தெரிய வருகிறது.